இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு நிலைமையை சமாளிக்க அந்நாட்டிற்கு இந்தியா ரூ.25 கோடி வழங்கியுள்ளது இதனை முதலில் ஏற்க மறுத்த பாகிஸ்தான் திடீரென் ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்த்து.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி வெள்ள நிவாரணத்துக்காக இந்தியாவின் நிதி உதவியை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும் அதனால் உலக அளவில் பாகிஸ்தானின் மதிப்பு நிச்சயமாக உயரும் என்றும் தெரிவித்தார். இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் நிதி உதவி பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அதற்கான உரிய காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
வெள்ள நிவாரணத்துக்காக இந்தியாவின் நிதி உதவியை ஏற்றுக்கொள்வதாக பாகிஸ்தான் ஒருவார ஆலோசனைக்குப் பின் நேற்று சம்மதம் தெரிவித்தது. எனினும் பாகிஸ்தான் அரசின் இந்த செயலை அங்குள்ள சில அரசியல்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




