இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சமா ஏர்லைன்ஸை இழுத்து மூட முடிவு

E-mail அச்செடுக்க

ரியாத்: சவூதி அரேபியாவில் குறைந்த கட்டணத்தில் இயங்கி வரும் சமா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெகு விரைவில் தனது சேவைகளை நிறுத்தி விட திட்டமிட்டுள்ளது இது தொடர்பாக சமா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சவூதியில் இயங்கும் இரண்டு குறைந்த கட்டண ஏர்லைன்ஸில் ஒன்றான சமா இவ்வாண்டு 1 பில்லியன் சவூதி ரியால் (266 மில்லியன் டாலர்) நஷ்டமடைந்திருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சவூதி அரேபியாவின் விமான கட்டுபாடு நிறுவனமான சிவில் ஏவியேஷன் ஜெனரல் அத்தாரட்டியின் செய்தி தொடர்பாளர் காலித் அல் கய்பாரி சமா ஏர்லைன்ஸின் இம்முடிவை அறிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்