இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தாம்பத்யம் சிறக்க சிறந்த வழி : ஆய்வு முடிவு

E-mail அச்செடுக்க

புகைபிடிக்கும் பழக்கம் உடைய கணவன்மார்கள் புகைபிடிப்பதை நிறுத்தி கொண்ட பின் தாம்பத்தியத்தில் அதிக இன்பம் கொள்வதாக ஹாங்காங் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

 

இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 28.1 சதவீத புகைபிடிக்கும் ஆண்கள் விறைப்பு தன்மையில் குறைவினை உடையர்கள், புகை பிடிப்பதை நிறுத்திக்கொண்ட பின் அதில் 91.5  சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் உதவிய பேராசிரியை சோஃபியா சான் "சீனா மற்றும் ஆசியாவில் ஆண்களுக்கு விறைப்புதன்மையில் மந்தம் பரவலாக காணப்படுகிறது" என்றும் "இந்த ஆராய்ச்சி புகைபிடிப்பதை நிறுத்த உதவும்" என்றும் கூறியுள்ளார்.

இவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட லாம் தை-ஹிங் கூறுகையில் "புகைபிடிப்பவர்கள் அதன் மூலம் ஏற்படும் பின் விளைவுகளை தெரிந்து கொண்டு, விறைப்பில் குறைவு ஏற்படுதல் மற்றும் இன்னபிற பாதிப்புகளில் இருந்து உடனே மாற்றம் காண புகைபிடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றுள்ளார்.

30 முதல் 50  வயதுடைய 700பேரை மூன்று வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இவ்வாறு நிருபிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: அமுமீ, August 23, 2010
புகைப் பிடிக்கிற எல்லா கணவன்மார்களும் உடனே புகைப்பழகத்தை விடுங்க! விடுங்க!! விடுங்க!!!

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்