சென்னை: சினிமாவில் நடிக்க லட்சக் கணக்கில் கருப்பு பணம் வாங்கும் விஜயகாந்த்இ ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்ககை:திமுகவின் தலைவராக இருக்கும் நான் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக, மீதியை பொது நலன்களுக்கான நிதியாக வழங்குகிறேன்.
உதாணத்திற்கு மண்ணின் மைந்தன், கண்ணம்மா ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியதின் மூலம் கிடைத்த ஊதியம் 21 லட்ச ரூபாயை, சுனாமி நிவாரணத்திற்காக அப்போது முதல்வராக இருந்து ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டது. இதபோல, உளியின் ஓசை திரைப்படத்திற்காக பெற்ற தொகை ரூ.18 லட்சத்தை மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கினேன்.
மாதந்தோறும் ஏழை எளியோருக்கு கலைஞர் கருணாநிதி அறக்கட்டனை நிதியில் இருந்து 2,049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி, அதன் மூலம் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளையின் சார்பாக, இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி அறக்கட்டளை உருவாக்கி, அதன் மூலம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகத் தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு முதன் முறையாக 10 லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட்டது.பெண் சிங்கம் திரைப்படத்திற்காக கிடைத்த ரூ. 50 லட்சத்தையும், இளைஞன் திரைப்படத்திற்காக அளிக்கப்பட்ட 50 லட்ச ரூபாயையும் முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்து, அருந்ததியின மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் நலன்களுக்கும் வழங்கப்பட்டது.
கோபாலப்புரத்தில் தற்போது வாழ்ந்துவரும் வீட்டைக்கூட, ஏழை - எளியோருக்கு பயன்படும் வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக அளித்துள்ளேன்.
அப்படிப்பட்ட என்னையும், மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்று கூறும் விஜயகாந்த், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு லட்சக்கணக்கில் வாங்கும் பணத்தில் பெரும்பகுதி வருமானவரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், விஜயகாந்த் ஊழலைப்பற்றி பேசியிருப்பது உலகத்தினர் வாய்விட்டுச் சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது?

| < முந்தையது | அடுத்தது > |
|---|




