கேரள அரசின் கண் தான திட்டத்தை நடிகர் கமல் ஹாசன் தொடங்கி வைத்தார். கேரள அரசின் கல்வித்துறை சார்பில் தரிசனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள கண்தானத் திட்டத்தின் தொடக்க விழா திங்கள் கிழமையன்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள தர்பார் அரங்கில் நடைபெற்றது.கண் தானத் திட்டத்தின் தொடக்க விழாவின் போது கமல் ஹாசன் நற்பனி இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர், கேரள அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சமூக நல அமைப்பைச் சேர்ந்தோர் கண்தானம் செய்தனர்.
ஏற்கனவே தன் கண்களை தானம் செய்துள்ள கேரள கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ. பேபி, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக தனது உடலை தானம் செய்வதாக அறிவித்தார். கேரள எதிர்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள் திவாகரன், ஸ்ரீமதி விஜயகுமார் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசனின் 50 ஆண்டுகால கலைச்சேவையைப் பாராட்டி விழா நடத்தப்பட்டது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




