இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

முதல்வர் - ஜெயலலிதா நேருக்கு நேர் சந்திப்பு தவிர்க்கப்பட்டது

E-mail அச்செடுக்க
தமிழக தலைமை தகவல் ஆணையர் தேர்வு தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொள்ளவில்லை என்பதால் தகவல் ஆணையர் குறித்த தேர்வும் நேற்று நடைபெறவில்லை.

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதவிக் காலம் இம்மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான கூட்டம் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒரு மாநில அமைச்சர் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர் கூடி தேர்வு செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

இதன்படி முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு இருந்தது.ஆனால் ஜெயலலிதா வர மாட்டார், அவருக்குப் பதில் துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வம் போவார் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், விதிப்படி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே வந்தாக வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடந்த கூட்டத்தில் நிதியமைச்சர் அன்பழகனுடன்
பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை செயலர் கே.என்.வெங்கட் ரமணனும் கலந்து கொண்டார். எதிர்க்கட்சி சார்பில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் புதிய தகவல் ஆணையர் யாரென்று அறிவிக்கப்படவில்லை. நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டு ஒப்புத்ல பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்