இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமெரிக்காவை எதிர் நோக்கியுள்ள இரண்டாவது பொருளாதார மந்த நிலை

E-mail அச்செடுக்க
அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்தடுத்த மாதங்களில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா எச்சரித்துள்ளார். மேலும் இதை 'ஹிண்டன்பர்க் பயங்கரம்' என்று பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா.

அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை பல்வேறு புள்ளியல் கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், அதன் பொருளாதாரமும் எதிர்கொள்ளும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச்சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்கு சமீபத்தில் விற்கப்பட்டன. 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

பங்குச் சந்தைப் போக்கைக் கணிக்கும் மெக்லீன் முறையில் அமெரிக்க பங்குச் சந்தையின் போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாக உள்ளதாகவும், இதன் தொடக்கம் செப்டம்பரில் இருக்கும் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.

ஜிம்மின் பொருளியல் ஆய்வு முடிகள் இதுவரை எதுவும் பொய்த்ததில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை அமெரிக்கர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலி இந்தியாவைப் பாதிக்காது. இந்திய பங்குச் சந்தையில் அடுத்த சில மாதங்களில் 10% வீழ்ச்சி சாத்தியம் என்றாலும் அதனால் பெரும்பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது இந்தியர்களுக்கு சற்று ஆறுதலான செய்தி.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்