திமுகவுடன் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள கூட்டணி தொடரும். இதை காங்கிரஸார் யாரும் விமர்சிக்கக் கூடாது. மீறினால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் எச்சரித்துள்ளார்.திமுகவையும், அதன் ஆட்சியையும், அதன் செயல்பாடுகளையும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிராக பேசுவதற்கு எந்த தனி நபருக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும்,அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மேலிட அனுமதியோ அல்லது அங்கீகாரமோ அளிக்கவில்லை.
யாருக்கேனும் பிரச்சினை என்றால் அதை பொது இடங்களிலோ அல்லது பத்திரிக்கை, டிவி மூலமாகவோ எழுப்பினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது.கூட்டணிக்கு எதிரான பேச்சுக்கள், சூடான அறிக்கைகளை கட்சியினர் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துக்கள் கட்சி விரோத நடவடிக்கையாக பார்க்கப்படும்.
கட்சி மேலிடத்தைத் தவிர வேறு யாரும் கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என்றார் ஆசாத்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




