உலகின் மிகச் சிறந்த நாடுகளில் இலங்கை, இந்தியாவை விட சிறந்த நாடாக இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூஸ்வீக் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடமும் சீனாவுக்கு 59வது இடமும் இலங்கைக்கு 66வது இடமும் கிடைத்துள்ளது.பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தைப் பிடித்துள்ளன.
சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் அம்சங்களை மையமாக வைத்துத் தொகுத்த பட்டியலில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகியவை. அமெரிக்கா 11வது இடத்தையும், ஜெர்மனி 12வது இடத்தையும், இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய நாடுகளில் ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகியவை மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன.
முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் வாசகர்களின் தேர்வு மூலம் இந்த முடிவுகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது நியூஸ்வீக் இதழ்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




