இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

புதன் கிழமை மாநிலக் காவல்துறைத் தலைவர்கள் மாநாடு!

E-mail அச்செடுக்க
மாநில காவல் துறை தலைவர்களின் (டிஜிபி/ஐஜி-க்கள்) மூன்று நாள் மாநாடு நாளை புது தில்லியல் தொடங்குகிறது. இந்த மாநாட்டினை உளவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் திரு ப சிதம்பரம் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பார். மாநாட்டின் இரண்டாம் நாளான 26.08.2010 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உரையாற்றுவார்.

தேசப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதும், காவல் துறை உயர் அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் கலந்துரையாடுவதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். காவல் துறையின் பல்வேறு செயல்பாட்டு, அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் நலவாழ்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.  

குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பயங்கரவாத பிரச்சனையை எதிர்கொண்டு உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், காவல் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்