இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

லெபனானுக்கு உதவ ஈரான் முன்வந்தால் வரவேற்போம்: ஹிஸ்புல்லா

E-mail அச்செடுக்க

லெபனானுடைய இராணுவத்தை மறுசீரமைக்கவும், நவீனப் படுத்தவும் ஈரான் முன்வரவேண்டும் என அந்நாட்டின் அதிபர் மிஷேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து லெபனானுடைய இந்த வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்போம் என ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் செய்யத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

லெபனானுக்கு மிக முக்கிய எதிரியான இஸ்ரேலை ஒடுக்க லெபனானுக்கு ஆதரவாக இருக்கும் நட்பு பாராட்டும் நாடுகளின் உதவியை நாடுவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று அவர் கூறினார்.

அமெரிக்கா போன்ற இஸ்ரேலிய ஆதரவு நாடுகளில் இருந்து வாங்கப்படும் ஆயுதங்கள் இஸ்ரேலைத் தாக்கப் பயன்படும் என்று நம்புவது முட்டாள்தனமானது என்றும் அவர் தெரிவித்தார்

ஈரானைப் போலவே லெபனானும் அணு உலைகள் நிறுவி லெபனானுடைய மின்தேவையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக 50 நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்கும் அளவிற்குத் தங்களிடம் உற்பத்தித் திறன் இருப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்தே லெபனான் அதிபர் ஈரானிடம் ஆயுத உதவி வேண்டுகோளை விடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்