இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காவிப் பயங்கரவாதம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை

E-mail அச்செடுக்க

டெல்லி: நாட்டில் புதுவித காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 இந்தியாவின் காவ‌ல்துறை தலைவ‌ர்க‌ள் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ப.சிதம்பரம்,  நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு குண்டு வெடிப்புக்களில் காவிப் பயங்கரவாதத்தின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 மாலேகான், நந்தித், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மசூதி, கோவாவின் மார்கோ உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புக்களில் இந்துத்துவாவின் கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 மாலேகான் மற்றும் நந்தித் குண்டுவெடிப்புக்களுக்கு பின்னணியில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பே செயல்பட்டது என்பதை மும்பைத்தாக்குதலின் போது கொல்லப்பட்ட மஹாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: அமுமீ, August 25, 2010
சொல்லாதீங்க மிஸ்டர் ப. சிதம்பரம். நடவடிக்கை எடுத்து செயல்ல காட்டுங்க.
0
...
எழுதியவர்: PortoNovo KajaNazimudeen, Riyadh, August 26, 2010
Mr. Minisiter, சொல்லிக்கொண்டு இருப்பதில் பிரயோஜனமில்லை. உங்களது விவேகத்தை, செயலில், காட்டினால் இந்தியா உருப்படும். செய்வீர்களா?
0
...
எழுதியவர்: Abu Faheem- Riyadh, August 26, 2010
இந்தியாவில் நடத்தப்பட்ட அநேக குண்டுவெடிப்புகள் பாஸிஸ பயங்கரவாதிகளாள் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது அதுவும் இந்திய உள்துரை அமைச்சர் அவர்களே காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் கூறியிருப்பது காலத்தின் கட்டாயம் இதனைதான் பார்புலர் ஃபிண்ட் ஆஃப் இந்தியா பலவேறு கூட்டங்களிளும் அவர்களது பத்திரிக்கைகளிளும் பல மாதங்களாக ஏழுதியும் பேசியும் வந்தனர் இதனை மையமாக வைத்து கடந்த 9ம் தேதி தேசிய அளவில் பாஸிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம் என்ற கோஷத்துடன் மாபெரும் கேம்பெய்ன் நடத்தினர் இதற்காக நோட்டிஸ் ஒட்டிய பாப்புல் ஃபிரண்டின் உறுப்பினர்கள் இந்தியாவில் பல பகுதிகளிலும் கைதுசெய்யப்பட்டனர் இருந்தும் பாப்புல்h ஃபிரண்டின் கருத்தை மத்திய உள்துரை அமைச்சர் ஆமோதித்திருப்பது பாப்புல்h ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பாஸிஸ எதிர்ப்பு பிரச்சாரத்திற்க்கு கிடைத்த வெற்றி என்பது உண்மையாகிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
0
...
எழுதியவர்: veera, August 26, 2010
don't ask do it action

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்