மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்கான இணைப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன் கிழமையன்று நடைபெற்றது.இணைப்பு விழாவுக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தன்னுடைய ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.
இணைப்பு விழாவில் துணைமுதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, "20 ஆயிரம் பேர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று தி.மு.க.வில் இணைவதாக அறிவித்தனர். மழை காரணமாக அவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. அரசுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கக் கூடிய அவர் திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்’’ என்று கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




