இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

E-mail அச்செடுக்க

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 58-வது பிறந்த நாளை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கொண்டாடினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் “கேக்” வெட்டினார். அதை குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார். இதையடுத்து அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறும்போது, விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.

இதையடுத்து விஜயகாந்தை நேரில் பலர் வாழ்த்து தெரிவித்தனர், வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:- தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, நந்தகுமார், இளங்கோ, கிருஷ்ண மூர்த்தி, சந்திரகுமார், சுந்தரராஜ், ஆசின், தேர்தல் பிரிவு செயலாளர் மா.பா. பாண்டியராஜன், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், வி.யுவராஜ், செந்தாமரைக்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சோமு, காளிச்சரண், கூடல் ரமேஷ், சுரேஷ்குமார், ரவிச்சந்திரன், வேளச்சேரி பிரபாகரன், கே.எஸ்.மலர்மன்னன், பகுதி நிர்வாகிகள் முருகேசன், வி.சி.ஆனந்தன், அன்புராஜ், வாசுதேவன், அகமது, பிரபா கரன், ரூபன், ரமேஷ், செல்வம், கமாலுதீன், முன்னா செல்வகுமார், விசாகன்ராஜா, ரவிக்குமார், ஆயிரம் விளக்கு கோவிந் தன், லிங்கம், வேல்முருகன், முகமதுஜான், ராயபுரம் வே.பாபு மற்றும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தார்கள்.  விஜயகாந்துக்கு திரைப் பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், என்.கே.விஸ்வநாதன், இயக்குனர் நந்தகுமார், நடிகர்கள் முரளி, எஸ்.வி.சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராம கிருஷ்ணன், மாநில பா. ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க. தொண்டர்கள் இன்று மாநிலம் முழுவதும் விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏழைகளுக்கு வேட்டி- சேலை, தையல் எந்திரம், 3 சக்கர வாகனம் வழங்கினார்கள். முக்கிய இந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளில் தே.மு.தி.க. தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விஜயகாந்த் இன்று எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

கருத்துக்கள் (3)Add Comment
0
...
எழுதியவர்: Abu Faheem- Riyadh, August 26, 2010
இந்த ஈ வி கே எஸ் க்கு முளை கெட்டுபோச்சா? அல்லது காங்கரஸ் டெல்லி தலைமை விளையாடும் சதுரங்மா? வரும் தேர்தல் கூட்டனிக்கு அச்சாரமா? எங்கோ இடிக்குதே? பொருத்திருந்து பார்ப்போம்.
0
...
எழுதியவர்: ramanan, August 26, 2010
ada arasiyalla idhellaam sagajamappa...
0
...
எழுதியவர்: அபு நிஹான், August 26, 2010
கருணாநிதி கூட்டணி வேண்டாமென்றால் வேண்டாமென்று சொல்ல வேண்டும், பிறகு யாருடன் கூட்டணி என்று தைரியமாக அறிவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு டெல்லியிலிருந்து வரும் செய்திகள் தமிழ்நாட்டின் செய்திகளுக்கு முரணாக இருப்பது என்பது ஒரு கட்சிக்கு ஆரோக்கியம் அல்ல. நடுநிலையாளர்களையும், பொது மக்களையும் பைத்தியக்காரர்களாக் ஆக்க நினைக்கும் காங்கிரஸ் மக்களின் விழிப்புணர்வையும் கருத்தில் கொண்டு தன் கட்சியின் சகாக்களை அடக்கி வாசிக்க சொல்வது நல்லது, அல்லது திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும், தைரியம் இருந்தால்?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்