இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மல்லிகைப்பூ-கிலோ 1,000 ரூபாய்

E-mail அச்செடுக்க
கல்யாண முகூர்த்தங்கள் மற்றும் திருவோணம் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் மல்லிகைப்பூவின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளதாக நமது தமிழகச்செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கடந்த மாதம் வரை  கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ  நேற்று கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர், ரெட்டியப்பட்டி, மல்லி, வலையப்பட்டி, பாறைப்பட்டி உட்பட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.  "கடந்த மாதத்தை விட மல்லிகை பூவிற்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. திருவோணம், திருமணம் நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த விலையேற்றம் இந்த மாதம் முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது" என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்