ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் தலை சிறந்த கம்ப்யூட்டரகளை தயாரித்து வருகிறது. இது இதுவரை தயாரித்து விற்பனை செய்து வரும் அனைத்து பொருட்களும் தரத்தில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஐ-மேக் மேசை கணினி, ஐ-புக் மடி கணினி, ஐ-பாட் பல்வகை ஊடக இயக்கி, ஐ-போன் போன்ற வரிசையில் சமிபத்தில் வெளியிட்ட ஐ-பாட் அதிக பிரபலம் அடைந்தது.தற்போது இந்த நிறுவனம் சி.பி.யு, கீ-போர்டு, மௌஸ் இல்லாத ஐ-டச் எனு புதிய வகை கணிப்பொறியை வெளியிட உள்ளது. அதாவது கணினியின் திரையிலேயே தொட்டு கட்டளையிடும் புது வகை கணினி ஆகும். வெறும் மொனிடோர் மட்டுமே இருக்கும் மற்ற எதுவும் இருக்காது. கணினி பயனீட்டாளர்களின் பல நாள் கனவான இந்த கணினியின் வரிவடிவத்தை தயாரித்துள்ள ஆப்பிள் நிறுவனம் அதை காப்புரிமையும் பெற்று விட்டது.
மேலும் இதில் இரண்டு ஆபரேட்டிங் சிஸ்டம் நிறுவப்பட்டு இருக்கும். கீ-போர்டு, மௌஸ் பயன்படுத்தி உபயோகிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு ஆபரேட்டிங் சிஸ்டமும், அப்படியில்லாமல் தொடுதிரை பயன்படுத்த மற்றொரு ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுவல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்ட் பயன்படுத்தும் ஐ-போன், பாஸ்வேர்ட்க்கு பதிலாக போட்டோ, குரல் மற்றும் இதய துடிப்பை கொண்டு இயங்கு தளத்திற்கு உள்ளே அனுமதிக்கு தொழில்நுட்பத்தையும் வெளியிட உள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




