இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்திய-சீன எல்லையில் போர் பதற்றம்! படைகள் குவிப்பு

E-mail அச்செடுக்க

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல வருடங்களாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பென்டகன் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. அதில் இந்திய எல்லையை நோக்கி சீனா சி.எஸ்.எஸ்.5 ஏவுகணைகளை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது..

இதையடுத்து இந்தியப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சீன எல்லையை நோக்கி இந்தியா தனது "அக்னி-3" ஏவுகணையை நிறுத்த உள்ளது. இந்த ஏவுகணைகள் 3 ஆயிரம் கி.மீ. முதல் 3,500 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கக்கூடியது ஆகும். மேலும் ரஷிய தொழில் நுட்பத்தை கொண்ட ஏவுகணைகளும் தயார் நிலையில் உள்ளன. இவைகள் அசாம் எல்லையில் தேஜ்பூர் மற்றும் சாபுவா பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

ஏற்கனவே இந்தியா "அக்னி-2" வகை ஏவுகணைகளையும் சீனாவை நோக்கி நிறுத்தி வைத்துள்ளது. இது 2000 கி.மீ. தூரம் பறந்து சென்று இலக்கை தாக்க கூடிய திறன் கொண்டது. இந்த ஏவுகணைகள் மேற்கு வங்காள மாநிலத்தில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்ததாக 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய "அக்னி-5" ரக ஏவுகணையை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் எந்த இலக்கையும் சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்

இதேபோல் வடகிழக்கு பகுதி மலைப்பகுதியில் 30 ஆயிரம் ராணுவ வீரர்களை கூடுதலாக நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது..

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்