தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 58வது பிறந்த நாளின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் வியகாந்த் - இளங்கோவன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து வரும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததோடு திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில், தன்னைப்போலவே முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வரும் தேமுதிக தலைவர் விஜய்காந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் இளங்கோவன்.
அவரது பிறந்த நாளையொட்டி தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையிலுள்ள கட்சி தலைமை அலுவலத்தில் தனது பிறந்தநாளை நேற்று விஜயகாந்த் கொண்டாடினார். அரசியல் மற்றும் கலைத்துறை பிரமுகர்கள் அவரை நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென பூங்கொத்துடன் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். இன்ப அதிர்ச்சியடைந்த விஜயகாந்த் சிரித்துக் கொண்டே, ''இன்று இதுதான் பத்திரிகைகளுக்கு முக்கியச் செய்தி'' என்று கூற, பதிலுக்கு இளங்கோவன் ''இது யார் யாருக்கெல்லாம் வலியை உண்டாக்கப் போகுதோ" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், விஜயகாந்த் நல்ல தலைவர். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.
இலங்கை தமிழர் பிரச்சனை தீரும் வரை பிறந்த நாள் கொண்டாடப்போவது இல்லை என்று அறிவித்திருந்த விஜய்காந்த், அரசியல் கட்சி தொடங்கியது முதல் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்துக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




