இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூஃப் ஹக்கீம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
அது தொடர்பாகத் தமது கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களோடு கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இன்று (27.08.2010) விசேட கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு கட்சித் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இன்று மாலை இடம்பெறும்.
நேற்று முன்தினம் (25.08.2010) கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமுக்கும் இடையில் நிகழ்ந்த விசேட பேச்சுவார்த்தையின் போது அவ்விருவரைத் தவிர வேறு எவரும் சமூகமளித்திருக்கவில்லை என்பதும், மேற்படி ரகசியப் பேச்சுவார்த்தை சுமார் ஒருமணி நேரம் வரை நீடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஆகிய இருவரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தோ, அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாகவோ கலந்துரையாடியிருக்கலாம் என அரசாங்கப் பொதுச் செயலாளர் கருத்துரைத்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




