இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தனியார் பஸ் ஊழியர்களுக்கு தமிழ்மொழிப் பாடத்திட்டம்

E-mail அச்செடுக்க

சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கைத் தனியார் பஸ் ஊழியர்களுக்குக் குறுகியகாலத் தமிழ்மொழிப் பாடத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

இலங்கைப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுக்கப் பட்டுள்ள மேற்படி செயற்திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக தற்போது காலி மாவட்ட தனியார் பஸ் ஊழியர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இந்த செயற்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு தமது அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழி பேசும் தனியார் பஸ் ஊழியர்களுக்கான குறுகிய கால தமிழ்மொழிப் பாடத்திட்டதில், தமிழ்மொழியில் பேசுவதற்கான சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்