இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சீனாவுடனான ராணுவ பரிமாற்றங்கள் ரத்து! இந்தியா முடிவு

E-mail அச்செடுக்க

புதுடெல்லி: இந்திய ராணுவ அதிகாரி ஒருவருக்கு சீனா அரசு விசா வழங்க மறுத்த்தையடுத்து அந்நாட்டுடனான அனைத்து ராணுவ பரிமாற்றங்களையும் ரத்து செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீன விசா மறுக்கப்பட்ட ராணுவ அதிகாரி தற்போது காஷ்மீரி்ல் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு, விசா கேட்டு விண்ணப்பித்த காஷ்மீர் மக்களுக்கு இந்திய பாஸ்போர்ட் இல்லாமலேயே சீனா விசா வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரிக்கு விசா வழங்க மறுத்துள்ளதை அடுத்து இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ பரிமாற்ற உறவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்