எந்த ஒரு சூழ்நிலையிலும் காஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கக் கூடாது என, பாஜக மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி "எந்த ஒரு சூழ்நிலையிலும் காஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கக் கூடாது" என்றார். மேலும் "காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். இந்தியாவின் சொர்க்கம் போன்ற பகுதி. அங்கு சர்ச்சைகள் தற்போது தீ பிழம்பாக எழுந்துள்ளன. எங்குதான் சர்ச்சைகள் இல்லை. காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கிவிட்டால், வடகிழக்கில் உள்ள மாகாணங்களும் அதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை வலுப்படுத்த தொடங்கிவிடும். எனவே இந்தியாவின் அங்கமான காஷ்மீரை யாருக்கும் விட்டுத்தர முடியாது
மேலும் ஜம்மு காஷ்மீரில் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியை விட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்வதையே காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். அதற்காக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குதை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் காஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கக் கூடாது. இதில் மத்திய அரசு துணிச்சலுடன் செயல் பட வேண்டும்" என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




