மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் என்ஜினில் தீ பிடித்ததாகபயணி ஒருவர் தந்த தவறான தகவலால் விமான அதிகாரிகள் அபாய எச்சரிக்கை மணியை ஒலிக்கச்செய்தனர் இதனைத்தொடர்ந்து பயணிகள் தங்களைகாப்பாற்ற அங்கும், இங்கும் ஓடியதிலும், மேலே இருந்து குதித்ததிலும் 30 பேர் காயமடைந்தனர்..பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜெட் ஏர்வேஸ் ( 9 w 2302 ) விமானம் நேற்றுஇரவு 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டது . இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். மேலே கிளம்பிய சில நிமிடத்தில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீ பிடிப்பதாக சில பயணிகள் தெரிவித்தனர். பைலட்டுக்கு தெரிய வந்ததும் அவர் அபாய எச்சரிக்கையை எழுப்பினார். பயணிகள் வெளியேறுமாறு கமாண்டர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்தஅபாய எச்சரிக்கை சப்தம் கேட்டதும் பயணிகள்பதறினர . , பயணிகள் விமானத்திற்குள் இருந்து அங்கும், இங்குமாக ஓடினர். சில பயணிகள் கீழே குதித்தனர். இதனையடுத்து விமானம் அவசர, அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அனைத்து விமானிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 30 பயணிகள் காயமுற்றனர்.பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
உண்மையில் விமானத்தில் தீ பிடிக்கவில்லை,விளக்குகளின் பிரதிபலிப்பில் தீ பிழம்பு போல் தெரிந்ததாக பயணிகள் கருதி விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டது என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. சென்னை வரவிருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு தாமதமாக நள்ளிரவில் 2 மணி அளவில் வந்து சேர்ந்தனர்

| < முந்தையது | அடுத்தது > |
|---|




