சென்னை, தமிழகம் வடக்கு, தமிழகம் வடக்கு மத்தி, தமிழகம் மேற்கு, தமிழகம் கிழக்கு மத்தி, தமிழகம் தெற்கு மத்தி, தமிழகம் தெற்கு என ஏழு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.சென்னை தொகுதியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் இடம் பெறும். தமிழகம் வடக்கு தொகுதியில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் இடம் பெறும். தமிழகம் வடக்கு மத்தி தொகுதியில், விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர் மாவட்டங்கள் இடம் பெறும்.
தமிழகம் மேற்கு தொகுதியில், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களும், தமிழகம் கிழக்கு மத்தி தொகுதியில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களும், தமிழகம் தெற்கு மத்தி தொகுதியில், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களும், தமிழகம் தெற்கு தொகுதியில், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களும் இடம் பெறும்.
தொகுதி வரையறை பற்றி இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், தேர்தல்ஆணையம் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அறிகிறது. தேவைப்பட்டால், தொகுதிகள் மீண்டும் மறுவரையறை செய்யப்படும்.வாக்காளர்கள் தொடர்பாகவும் இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
வாக்காளர் தேர்வில் பல விதிமுறைகளையும் தேர்தல்ஆணையம் உருவாக்கியுள்ளது. ஆசிரியர் பிரிவில் நடைபெறும் தேர்தலில் பங்கு பெற, கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும். பட்டதாரி தொகுதிகளில் வாக்களிக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




