டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான மையநோக்குப் பாடல் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் அக்டோபர் 3 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க டெல்லி மாநகரே தயாராகிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளுக்காக பிரத்யேகப் பாடல் ஒன்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் அறிமுக நிகழ்ச்சி சனிக்கிழமையன்று குர்கானில் நடைபெற்றது. பிரமாண்டமான வண்ணமயமான நிகழ்ச்சி நடைபெற்றது. ஜியோ உதோ பதோ ஜிதோ எனத் தொடங்கும் மையநோக்குப் பாடலை ஏ. ஆர். ரகுமான் மேடையில் பாடினார். இந்தப்பாடலை வெள்ளிக் கிழமையன்றுதான் இசையமைத்து முடித்ததாக ஏ.ஆர். ரகுமான் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




