இந்தியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற முத்தரப்பு போட்டி தொடரில் தலா இரு போட்டிகளில் வென்ற இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. ஜெயவர்தனே 39 ரன்களும் , தில்ஷன் 110 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சங்ககரா 71 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் சர்மா, படேல் தலா இரு விக்கெட்கள் வீழ்த்தினர்.
300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணி 46 .5 ஓவரில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. சேவாக் 28 ரன்களும், ஹோஹ்லி 37 ரன்களும், ரெய்னா 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் டோனி 67 ரன்கள் சேர்த்து கடைசியாக ஆட்டமிழந்தார். பெரேரா மற்றும் ரண்டிவ் தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




