இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்!

E-mail அச்செடுக்க

சென்னை அருகே ஈக்காடுதாங்கலில் உள்ளது  ஜெயா தொ.கா அலுவலகம். இந்த அலுவலகத்திற்கு  நேற்று (28ம் தேதி) மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

காலாந்திரி என்ற இடத்திலிருந்து அறிவொளி மதி என்ற பெயரில் வந்துள்ள கடிதத்தில்,"மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும்; இல்லையெனில் ஜெயலலிதாவும், அவரது கூட்டத்தினரும் மதுரையில் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்படுவார்கள்; சாக மதுரைக்குப் போங்கள்; இதை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா "டிவி" மதுரைக்கு வரவும். அண்ணனை பகைக்காதே; மதுரைக்கு வராதே; ஜெயாவை ஒழித்துக் கட்டுவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளதாம்

கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய கடிதங்கள் ஜெயா "டிவி" அலுவலகத்திற்கு வந்துள்ளன. அதுபற்றி போலீசுக்கு நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அதைபோல, தற்போதைய மிரட்டல் கடிதத்தையும் தங்களின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம்.எனவே, ஜெயலலிதாவுக்கும், ஜெயா தொ.கா மற்றும் அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்".இவ்வாறு  ஜெயா தொ.கா  துணைத் தலைவர் ரங்கராஜன், டி.ஜி.பி., லத்திகா சரணுக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருக்கிறார்.



கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்