இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மதுரையில் பெரும் தீ விபத்து! ரூ.3 கோடி சேதம்

E-mail அச்செடுக்க

மதுரை: மதுரையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பல கோடி மதிப்புள்ள ஜவுளிப்பொருட்கள் எரிந்து நாசமானது. இன்று மதியம் வரை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகில் உள்ள ஜவுளி நிறுவனங்களான பாலாஜி கார்மெண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் கார்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூன்றாவது மாடியில் இயங்கிவந்தனர். நேற்று நள்ளிரவில் ஜெனரேட்டர் என்ஜினில் இருந்து வெளியான தீயால் அந்த இரண்டு நிறுவனங்களில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த்து. தவலறிந்த தீயணைப்பு படையினர்  நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர்.

மூன்றாவது மாடி என்பதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரம்ம் ஏற்பட்டது.  கட்டடம் இடிந்துவிடும் அபாயம் இருந்ததால் மிகவும் எச்சரிக்கையாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று மதியம் 1 மணி வரையிலும் தொடர்ந்து தீயணைப்புவீரர்கள் தீ அணைக்க போராடிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் தீ முழுமையாக அணையவில்லை.

மதுரை மாநகராட்சி தீயணைப்புத் துறைக்கு போதிய தீயணைப்பு வசதிகள் அளிக்கப்படாமையே இவ்வளவு தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தீவிபத்தில் 3 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்