இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் எரிமலை! ஊரே காலியானது

E-mail அச்செடுக்க

இ‌ந்‌தோனே‌சியா:‌ சும‌த்‌ரா ‌தீ‌வி‌ல் சினாபா‌த் என்ற எரிமலை ஒன்று 400 வருடங்களு‌க்கு ‌பிறகு முத‌ன் முறையாக ‌ எ‌ரிமலை ‌சீ‌ற்ற‌ம் அடைய‌த் தொட‌ங்‌கியு‌ள்ளதா‌‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் ‌வீடுகளை ‌வி‌ட்டு வெ‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
சும‌‌த்ரா ‌தீ‌வி‌ல் உ‌ள்ள ‌சினாபா‌த் மலை‌யி‌ல் ந‌‌‌ள்‌ளிரவு நேர‌த்த‌ி‌ல் கரு‌‌ம்புகையுட‌ன் ‌தீ‌ப்‌பிழ‌ப்புக‌ள் வெ‌ளிவர‌த் தொட‌ங்‌கியது. க‌ட‌ந்த 400 ஆ‌‌ண்டு‌க்கு ‌பிறகு இ‌ம்மலை‌யி‌ல் இரு‌ந்து தீக்குழம்பு எதுவும் வெளிவராததால் அந்த எரிமலையை  க‌ண்கா‌ணி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டதாக எ‌ரிமலை ஆ‌‌ராய்‌ச்‌‌சியா‌ள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.


இ‌ந்‌நிலை‌‌யி‌ல் த‌ற்போது எ‌ரிமலை ‌தீ‌ப்‌பிழ‌ப்புக‌‌ள் வேகமாக வெளிவரத்தொடங்கியதை அடுத்து தீக்குழம்பு ம‌ற்று‌ம் சா‌ம்பலை பரவ‌‌ச் செ‌ய்வதா‌ல் சு‌ற்று‌ப்புற ‌கிராம‌‌ங்களு‌க்கு ஆப‌த்து‌ ஏ‌ற்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர். இதையடு‌த்து ‌சினாபா‌த் ‌எ‌ரிமலையை சு‌ற்‌றியு‌ள்ள ‌கிராம‌‌ங்களை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் ‌‌‌வீடுகளை ‌வி‌ட்டு அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடி வெ‌ளியே‌றி வரு‌கி‌ன்றன‌ர்.


எ‌‌ரிமலை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளிவரு‌ம் சா‌ம்பலா‌ல் சுவாச கோளாறு ஏ‌ற்படுவதை தடு‌க்க முக‌‌க்கவசம் அ‌‌ணியுமாறு இ‌ந்தோனே‌‌சிய அரசு கூ‌றியு‌ள்ளது. சினாபா‌த் எ‌ரிமலையை வ‌ல்லுந‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்