இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ்., திருமா, வாசன் சந்திப்பு: கூட்டணியில் மாற்றம் வருமா?

E-mail அச்செடுக்க

மறைந்த ஜி.கே. மூப்பனாரின் 9வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று (30.08.2010) பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவுதினத்தையொட்டி மலர்வளையம் வைக்க வந்த விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருமாவளவன், ஜி.கே.வாசன் ஆகியோர் ஒன்றாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

விஜயகாந்த் தனது அரசியல் மேடையில், தான் மதிக்கும் தலைவர் என மூப்பனார் பற்றி குறிப்பிட்டு, அவருடன் பழகிய நாட்களை நினைவு படுத்தி பேசுவார். விஜயகாந்த் பிறந்த நாளன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, விஜயகாந்த் மிகப் பெரிய தலைவராக வருவார் என பேட்டியளித்தார். அப்போது தேமுதிகவுடன் காங்கிரஸ் நெருங்குகிறது என செய்திகள் பரவின.

இந்நிலையில் இன்று இவர்கள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜி.கே. வாசனுடன் இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கூட்டணியில் அங்கம் வகித்த திருமாவளனும் இவர்களுடன் சிரித்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இவர்களின் சந்திப்பை பார்த்த அரசியல் கட்சியினர், விஜயகாந்த் தனது தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறிவருகிறார். இந்நிலையில் பலமிக்க காங்கிரஸ் கோஷ்டி தலைவர் வாசன், திருமாவுடன் விஜயகாந்த் பேசிகொண்டிருப்பது தமிழகத்தில் கூட்டணியை மாற்றும் விதமாகக் கூட அமையும் என்று கிசுகிசுத்தனர்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: AMUTHAN, September 05, 2010
Hi,

Really Appreciated news .... lets See about the Congress Decision .. Whether they r with Giant Bed Bugs r ... Newly Born Bed Bugs ........

....................................


கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்