இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டெல்லியில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பிரசவித்த பெண் மரணம்

E-mail அச்செடுக்க
தலைநகர்  டெல்லியிலுள்ள கன்னாட் பிளேஸ் மக்கள்  நடமாட்டமுள்ள பிஸியான பகுதி இங்கு  சங்கர்  மார்க்கெட் அருகே  வீதியோரம் உட்கார்ந்திருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதைக் கவனித்த அருகில் இருந்த உணவு விடுதி உரிமையாளர் பிரடெரிக் அதிர்ச்சி அடைந்தார். அவர் துணிக்கடைக்குச் சென்று துணி வாங்கி வருவதற்குள் அப்பெண்ணுக்குக் குழந்தை பெண் குழந்தை பிறந்துவிட்டது. தாயின் உடல் முழுவதும் சுகாதாரமின்றி இருந்ததால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை.மற்றொரு பெண் வியாபாரி குழந்தைக்கு பால் கொடுத்து பாதுகாத்தார்.

எனினும் தாயை கவனிக்க யாரும் முன்வராத காரணத்தால் கேட்பாரின்றி நான்கு நாள் கழித்து தாய் பரிதாபமாக இறந்துவிட்டார். அக்குழந்தைக்கு கரிஷ்மா என பெயரிட்டு, கோல் மார்க்கெட்டிலுள்ள கிறிஸ்தவ இல்லத்தில் ஒப்படைத்தனர். குழந்தை கரிஷ்மாவை பிரடெரிக் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்