லண்டன் : மேட்ச் பிக்ஸிங் புகாரை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களின் ஹோட்டல் அறைகளை சோதனை செய்த ஸ்காட்லாந்து காவல்துறை வீரர்களுக்கு வழங்கப்படும் அன்றாட செலவுகளுக்கான தொகையை மீறி ஏராளமான பணத்தை கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிபெண்ட் பத்திரிகையின் தகவல் படி பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் பட் மற்றும் இதர வீரர்களின் அறைகளை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை சோதனையிட்டது. மேலும் சல்மான் பட், ஆமிர், ஆசிப் உள்ளிட்ட வீரர்களின் செல்போன்களை கைப்பற்றி சோதனையிட்டனர்.
மேலும் காவல்துறை சல்மான் பட், முஹம்மது ஆமிர், முஹம்மது ஆசிப், கம்ரன் அக்மல் உள்ளிட்ட வீரர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். புக்கி மஜீத் ஜாமீனில் வெளிவந்தாலும் அவரையும் காவல்துறை கண்காணித்தே வருகின்றது. ஸ்காட்லாந்து காவல்துறை காட்டும் வேகத்தை பார்த்தால் இப்போதைக்கு இவ்விவகாரம் முடியாது போலிருக்கிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




