இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடுமை! 2 பேர் கைது

E-mail அச்செடுக்க

மத்திய பிரதேசம்: மன்சரா கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி வீதிவழியே அழைத்துச் சென்ற கொடுமையான நிகழ்வு மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

22 வயதான ஆதிவாசி இளம் பெண் ஒருவர் 2 வருடங்களுக்கு முன்பு சீதாராம் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டு தற்போது மன்சாரம் பகுதி வேறொருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முதல் கணவர் சீதாராம் தனது நண்பர்கள் 22-க்கும் மேற்பட்டவர்களுடன் வந்து, வீட்டில் தனியாக இருந்த முதல் மனைவியின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி, நிர்வாண கோலத்தில் வீதிவீதியாக அழைத்துச் சென்றுள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீது சீதாராமின் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது ஆகியுள்ளனர். தலைமறைவான சீதாராமையும் அவரது நண்பர்களையும் காவல்துறை தேடி வருகிறது.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: abufaheem, September 06, 2010
நாம் எந்தக்காலத்தில் இருக்கிறோம்? பெண்ணுரிமை பற்றி வாய்கிழியப்பேசும் பெண்ணுரிமைவாதிகளே எங்கே ஒழிந்துக்கொண்டிருக்கிறீர்கள் இவ்விஷயங்களௌ;லாம் உங்கள் காதுகளிள் விழாதே?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்