இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விஜயகாந்த் அவருடைய சொந்தக் கல்லூரியில்கூட முதல்வராக முடியாது: நெப்போலியன்

E-mail அச்செடுக்க

பெரியகுளம்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவருடைய சொந்தக் கல்லூரியில்கூட முதல்வராவது முடியாது என, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேசினார். பெரியகுளம் அருகே நடந்த திருமண  நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கலந்து கொண்டு பேசும் போது:

பொதுவாக சினிமா நடிகர்களை பார்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வரும். திருமணவிழா உள்ளிட்ட விசேஷங்களில் கலந்து கொள்ளும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான கூட்டங்களை பார்த்தால் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் அடுத்த முதல்வர் நான்தான் என கூறியிருப்பார்.

தே.மு.தி.க., 2005ல் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை பிடித்தது. வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், நாங்கள் நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஏற்புடையாத இருக்கும்.  அதை விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசி வருவது காமெடியானது. அவருடைய கல்லூரியிலேயே அவர் முதல்வராவது முடியாது, ஏனென்றால் கல்வித்தகுதி வேண்டும் என்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்