புதுடில்லி : மொபைல் போன் தயாரிப்பு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியோ நிறுவனம் இந்தியாவில் டூயல் சிம் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தியது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கூட்டத்தில் கூறியதாவது:
நோக்கியோ நிறுவனம் சி.1 100, சி2 100 என்ற இரு மாடல்களில் டூயல் சிம் மொபைல் போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும்,இதன் விலை ரூ. 1,700, மற்றும் 2,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார். நோக்கியா நிறுவனம், நைஜீரியாவில் டூயல் சிம் மொபைல் போன்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய போன்களில் பேட்டரி ஸ்டாண்ட் பை டைம் 6 வார கால அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




