புதுடெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு உள்ளிட்ட ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.14 ஆயிரம் கோடி நிதியை முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் நிறுவனத் தலைவர் பி. ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் ராம ராஜு, நிதி அதிகாரி வி. ஸ்ரீனிவாஸ் மற்றும் இருவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது.
இவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தீபக் வர்மா, தல்பீர் பண்டாரி ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




