இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அத்தைக்கு மீசை முளைத்தால் காங்கிரஸூடன் கூட்டணி: வைகோ

E-mail அச்செடுக்க

கோயம்புத்தூர்: கோவையில்  உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கான, முயற்சிகளை கேரள அரசு செய்து வருகிறது. அப்படி அணை இடிக்கப்பட்டால்,  பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும். முதல்வர் கருணாநிதி முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழக மக்களுக்கு  துரோகம் செய்துவிட்டார்.

நிருபமா ராவ் இலங்கை செல்வது ஒரு கண்துடைப்பு நாடகம்தான். உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து, கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, மத்திய அரசு போர் குற்றவாளியாக ஆக்குவதை தடுப்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வருகிறது. அதில் ஒரு முயற்சிதான் நிருபமா ராவின் பயணம்.

அதிமுக கூட்டணி மிக பலமாகத்தான் இருக்கிறது. கூடவே மக்களும் இணைந்திருக்கிறார்கள். கோவை மற்றும் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்தால் தெரியும். ஆளும் திமுக அரசு போட்டிக் கூட்டம் நடத்துவதாக, கூட்டிய கூட்டம் எவ்வளவு பெரிய தோல்வியில் முடிந்தது என மக்கள் பார்த்தார்கள் என்றார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் பார்ப்போம் என்றார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: PortoNovo,KajaNazimudeen,Riyadh, August 31, 2010
'அத்தைக்கு மீசை முளைப்பது' .... இருக்கட்டும்.
வை. கோ. தன் மீசையை ஜெ. க்கு தாரை வார்த்து பல வருடங்கள் ஆகி விட்டதே! smilies/wink.gif smilies/cheesy.gif

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்