கோவை செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி திமுக தலைவருக்கு எதிராக பேசிவந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திடீரென கொடநாட்டுக்குச் சென்று விட்டதால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தரப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீரென தோழி சசிகலாவுடன் கொடநாடு திரும்பிச் சென்றுள்ளார். விமானம் மூலம் கோவை சென்ற ஜெயலலிதாவை அதிமுக பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
அடுத்தடுத்து அதிரடி கூட்டங்களால், விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த அதிமுகவினருக்கு,திடீர் கொடநாடு பயணம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அங்கு மூலிகை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் புத்துணர்வுடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




