முகலாய மன்னர் பாபர் கட்டிய முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி இந்து அமைப்புகளால் இடித்து தரைமட்டமாக்கப்படடு அதில் ராமர் சிலையை வைத்தனர்.அவ்விடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் ஆகவேதான் பாபர் மசூதியை இடித்ததாகவும் இந்து அமைப்புகள் கூறிவந்தன. அந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்டவேண்டி முஸ்லிம்களும் சட்ட ரீதியில் போராடி வருகின்றனர்.
இதனிடையே பாபர் மசூதியின் இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை முடிந்து அடுத்த மாதம் 30-ஆம்தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சினைக்குரிய இடம் யாருக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் அறிவித்தாலும் எதிர்தரப்பினர் போராட்டத்தில் குதிக்கும் நிலை உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அயோத்தி உள்பட உத்தர பிரதேசத்தில் பல இடங்களிலும் நாட்டில் பல்வேறு இடங்களிலும் பெருங்கலவரம் ஏற்பட்டது.
அதேபோல தீர்ப்பின்போதும் கலவரம் ஏற்படக்கூடு என்று அஞ்சப்படுகிறது. எனவே உத்தரபிரதேசத்தில் இப்போதே பதட்டம் நிலவுகிறது. கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க உத்தரபிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது. அயோத்தி, கான்பூர், வாரணாசி, பிரெய்லி, மொராதாபாத், மீரட், மதுரா ஆகிய இடங்கள் பதட்டம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த உள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 50 ஆயிரம் கூடுதல் மத்திய போலீசாரை அனுப்பும்படி உத்தரபிரதேச அரசு கேட்டுள்ளது.அவர்கள் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
நரேந்திர சர்மா என்ற ஆசிரியர் கூறும்போது, அயோத்தியில் முன்பு போல மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட அயோத்தி மக்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
அயோத்தியைச் சேர்ந்த ஹசீம் அன்சாரி கூறும்போது, இடம் இந்துக்களுக்கு சொந்தமா? முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பதல்ல பிரச்சினை. இது ஒரு புனிதமான இடம். பிரச்சினைகள் வராமலிக்க அரசியல்வாதிகள் இதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றார்.
இதனிடையே விசுவ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோவிலை கட்டுவது தொடர்பாக மீண்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் பாபர்மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும் உள்ள வினய் கட்டியார் "இந்துக்களுடைய உணர்வு விஷயத்தில் கோர்ட்டு தலையிட்டு தீர்ப்பு சொல்ல முடியாது. கோர்ட்டு என்ன தீர்ப்பு சொன்னாலும் சரி அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு எங்கள் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபடுவோம்" என்று நச்சுக்கருத்துக்களை விதைத்து வருகிறார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




