ஹைதராபாத் : ஹைதராபாத்தில் பெய்த கடும் மழையை தொடர்ந்து ஹைதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய தொல்லியல் துறை மேலாய்வாளர் வீரபத்ர ராவ் சார்மினார் கோபுரத்தின் சிறிய மினாரட்டு தான் இடிந்துள்ளது என்றார்.
மேலும் 400 வருட கால கட்டிடத்தில் இது போன்று நடப்பது பெரிய விஷயம் அல்ல என்றும் இச்சிறிய சேதம் மழைக்கு பிறகு சரி செய்யப்படும் என்றும் சொன்னார். ஆனால் ராவின் கருத்தை தொல்லியல் துறை நிபுணர்களும் பழங்கால கட்டிட கலை ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.
சார்மினார் கோபுரத்தின் மினாரட் சரிந்துள்ளது இந்திய தொல்லியல் துறையின் பொறுப்பற்ற பராமரிப்பு தன்மையை காட்டுவதாகவும் நிரந்தர பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




