இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் சேர்ந்து சித்திரவதைவக்கு ஆளாக்கி பெண்ணின் 24 ஆணிகளை காய்ச்சி உடலில் செலுத்திய கொடுர சம்பவம் உலகையே உலுக்கியது. சவுதியை சேர்ந்த தம்பதியினர் இருவரின் மீதும் சவுதி அரேபியா அராசாங்கம் நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து அந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.என்.என். செய்திகள் வெளியிட்டுள்ளது.இதுவரை அந்த பெண்ணின் உடலில் இருந்து 18 ஆணிகளை மட்டுமே மருத்துவர்கள் நீக்கி உள்ளனர். ஆரியவது என்னும் அந்த பெண்ணுக்கு 49 வயதாகிறது மேலும் இரு குழ்னதைக்கு தாயும் ஆவார். பணி அதிகம் இருப்பதாக தன் முதலாளியிடம் தெரிவித்ததால் அவர்கள் இவ்வாறு கொடுமை படுத்தியுள்ளனர். அதிக வேலை பளுவினால் ஆரியவதி சோர்வடையும் போது அந்த தம்பதினர் இவ்வாறு ஆரியவதியை கொடுமைப்படுத்தி வேலை செய்ய வைத்துள்ளனர்.
இந்தியா, இந்தோனேசியா, நேபாள், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 15 லட்சம் மக்கள் அங்கு பணி புரிவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது அங்கு 1,96,000 பேர்கள் பணி புரிகிறார்கள.
பல்வேறு நாடுகளில் இருந்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் வந்துள்ளதை அடுத்து சவுதி அரசாங்கம் அந்த தம்பதியினரை கைது செய்துள்ளது. ஆனால் அவர்களின் பெயர்களை குரிப்பிடவில்லை என்று சி.என்.என். செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




