இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஜெயலலிதா மீதான வழக்கு : 31 ஆவது முறையாக ஒத்தி வைப்பு

E-mail அச்செடுக்க
கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புவனகிரி, புதுக்கோட்டை உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தவறு எனக் கூறி திமுக எம்.பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இவ்வழக்கு நேற்று பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு நீதிபதி இளங்கோவன் ஒத்திவைத்தார். இந்த வழக்கு விசாரணை 31வது முறையாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்