இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சென்னை துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து!

E-mail அச்செடுக்க

சென்னை துறைமுகத்திலுள்ள பழைய எண்ணெய் சேமிப்பு கிடங்கினை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டபொழுது எதிர்பாராத விதமாக அதில் தீப்பற்றிக்கொண்டதால் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற லூப்ரிகண்ட் ஆயில் எனப்படும்  மசகு எண்ணெய்களை சேமித்து வைக்கும் மிகப்பெரும் கிடங்குகள் சென்னை துறைமுகத்தில் இருக்கின்றன.  அதில் ஒரு கிடங்கினை புதுப்பிக்கும் விதமாக இன்று திங்கட்கிழமை வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அக்கிடங்கு தீப்பற்றிக் கொண்டது.

சட்டென்று எளிதில் பரவிய தீயினை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. 10 வெவ்வேறு இடங்களிலிருந்து பெருமளவிலான தீயணைப்புப் படை வீரர்கள் சென்னை துறைமுகத்தில் பரவிய தீயினை கட்டுப்படுத்தும் பணியில் தற்சமயம் ஈடுபட்டிருக்கின்றனர். துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் தீயினால் வடசென்னை கரும் புகைமூட்டத்தினால் சூழப்பட்டுள்ளது.

கிடங்கில் பரவிய தீயினை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள தீயணைப்பு படையினர் மற்ற கிடங்குகளுக்கும் தீ பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்