கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவனா சுப்பிரமணியத்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி, இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ள, தமிழினி தொடர்பில் இன்று சிஐடியினர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அதில், தமிழினியை விசாரணை செய்தபோது அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே நீதிவான் தடுப்பு காவல் உத்தரவை நீடித்தார். தமிழினி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




