இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ராஜரட்டை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

E-mail அச்செடுக்க

பல்கலைக்கழக மாணவர்களின் கல்விசாரா செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுநிருபம் ஒன்று வெளியாகி இருப்பதைக் கண்டித்து மிகிந்தலையில் அமைந்துள்ள ராஜரட்டைப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று ஒரு மணிநேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழக மாணவர் சங்கச் செயலாளர் லசித் ரோஹண மல்லவாராச்சி இது குறித்துக் கருத்துரைக்கையில், இந்தப் புதிய சுற்றுநிருபத்தின் பிரகாரம் இனிமேல் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு முன்கூட்டியே அறியத்தராமல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையே தோன்றும். குறைந்த பட்சம், ஒரு மாணவரின் மரணச்சடங்குக்கு எல்லோருமாய்ச் சேர்ந்து போவதாக இருந்தால்கூட அதற்கென்று தனியே ஒரு படிவத்தை நிரப்பிக்கொடுக்க வேண்டிவரும். இது மாணவருக்கெதிரான உரிமை மீறலாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கே.ஏ. நந்தசேன, மாணவர் அணிகளுக்கிடையே அடிக்கடி ஏற்படும் முரண்பாடுகளையும் மோதல்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமுகமாகச் செய்த முயற்சியை மாணவர்கள் எதிர்மறையாய் எடுத்துக்கொண்டமை வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்