பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல தற்போது தமிழகத்தில் போதைப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று டாக்டர். ராமதாஸ் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக அரசு 39 வகை மது வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். வன்முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து பணி நீக்கம் செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.அப்போது தான் 69 % இடஒதுக்கீடு கிடைக்கும்.
பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகஅரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி அக்டோபர் மாதம் என் தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




