இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ராஜபக்சேவுக்கு ஆதரவாக இலங்கை அரசியல் சட்டம் திருத்தம்

E-mail அச்செடுக்க

இலங்கை அரசியல் சட்டப்படி ஒருநபர் 2 தடவைதான் அதிபர் பதவி வகிக்க முடியும். இலங்கை அதிபராக பதவி வகிக்கும்மகிந்த ராஜபக்சே தற்போது 2-ஆவது முறையாக இப்பதவியில் உள்ளார். வரும் நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து 6 ஆண்டுகள் அதிபர் பதவி வகிக்க முடியும். அதன் பிறகு நடைபெறும் தேர்தலில் போட்டியிட முடியாது.

இலங்கை குடியுரிமை பெற்ற நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவி வகிக்கலாம்  என்பதாக ராஜபக்சேவுக்கு ஆதரவாக இலங்கை அரசியல் சட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த காலவரம்பு நீக்கப்பட்டு அரசியல் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரை ராஜபக்சே முடிவுக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து சிங்களர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்று திகழ்கிறார்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 144 இடங்களில் வென்று மூன்றில்இரண்டு மடங்கு பெரும்பான்மை பெற்றுள்ளார். இந்த செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்து 3-ஆவது முறையும் தேர்தலில் போட்டியிட்டு அதிபர் பதவியில் நீடிக்க வசதியாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.பாராளுமன்ற தேர்தலிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக இலங்கை செய்திதுறை மந்திரி கேகலியாராம் பக்வெல்லா தெரிவித்துள்ளார். சுகாதார துறை மந்திரி மைத்திரிபாலா ஸ்ரீசேனா இது குறித்து கருத்து தெரிவிக்கையில் "மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள குடிமகன் அதிபராகும் பட்சத்தில், அவர் பதவியில் தொடர இச்சட்டம் வழிவகை செய்துள்ளது என கூறியுள்ளார்.மேலும், மக்கள் தீர்ப்புக்கு இது மரியாதை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.இதன் மூலம் அதிபர் தனது அதிகா ரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
தனக்குச் சாதகமாக அரசியல் சட்டத்தை திருத்தி தனது குடும்ப ஆட்சியை இலங்கையில் தொடங்க முயற்சிக்கிறார் என்றும் கூறியுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்