இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கொடநாட்டில் ஜெயலலிதா வீடு முற்றுகை - அதிமுகவினர் போர்க்கொடி

E-mail அச்செடுக்க

கோவை, திருச்சி என அடுத்தடுத்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களால் அதிமுகவினர் உற்சாகமடைந்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக கூடியுள்ள மக்கள் திடீர் செல்வாக்கினால் ஆளும் திமுக தரப்பு அரண்டு போயுள்ள நிலையில்,ஜெயலலிதா மீண்டும்  ஊட்டி கொடநாடு எஸ்டேட்டுக்கு மீண்டும் ஓய்வெடுக்கச் சென்றார்.

மதுரை கண்டன ஆர்ப்பாட்டத்தை வெகுவிமர்சையாக நடத்தி அழகிரியின் கோட்டையான மதுரையிலும் செல்வாக்கைக் காட்டத்திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நீக்கப்பட்ட குந்தா ஒன்றியச் செயலாளர் புத்தி சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் சொகுசு பங்களாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்