இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஈராக் போர் முடிவுக்கு வந்தது - ஒபாமா அறிவிப்பு

E-mail அச்செடுக்க

ஈராக் எண்ணை வளத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில் அப்போதைய அதிபர் சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி முன்னால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்மீது  அநியாயமாகப் போர் தொடுத்தார்.

அதிபர் சத்தாம் ஹுசைன் சிறைபிடிக்கப்பட்டு கோழைத்தனமாக தூக்கில் ஏற்றி கொல்லப்பட்ட பிறகும், அமெரிக்க உதவியுடன் அரசியல் மாற்றங்கள் நடந்த பிறகும் ஈராக் மக்கள் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக மூர்க்கமாக போராடி அமெரிக்ககூட்டுப்படைகளுக்கு மிகுந்த உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்தனர்.

புலிவாலைப் பிடித்ததைப்போல் ஈராக் போராளிகளிடம் சிக்கிய அமெரிக்கா, அதிபர் ஒபாமா அதிபராக பதவி ஏற்றபிறகு ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவம் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்தார். கடந்த இரண்டு வருடங்களாக இழுத்தடித்து வந்த ஈராக் வெளியேற்றம் இனியும் தாக்குப் பிடிக்க முடியாமல் இம்மாதம் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து ஈராக் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.ஈராக் பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் போற்றத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
.
நேற்று நள்ளிரவு தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையில் ஈராக் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.ஈராக் பாதுகாப்பு இனி அந்நாட்டு வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்