இங்கிலாந்து அணிக்கெதிரான எதிரானஅண்மை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டப் புகாரில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தெரிந்ததே. இதன் தொடர்ச்சியாக, சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேரை ஐ.சி.சி. எனப்படும் உலகளாவிய கிரிக்கெட் கவுன்சில் இடைநிறுத்தம் செய்துள்ளது. .
முன்னதாக, மஜீத் என்ற புரோக்கரை இலண்டன் போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக ஐ.சி.சி., மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (PCB) குழு இலண்டன் சென்றது. அங்கு அவர்கள் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் பட், வீரர்கள் முஹம்மது ஆசிப், முஹம்மது ஆமீர் ஆகியோரிடம் விசாரனை செய்தது. விசாரணையின் விளைவாக அணித்தலைவர் சல்மான் பட், முஹம்மது ஆசிப், முஹம்மது அமீர் ஆகிய மூன்று வீரர்களையும் போட்டிகளில் பங்கெடுப்பதினின்றும் இடைநிறுத்தம் செய்ய ஐ.சி.சி., உத்தரவிட்டுள்ளது.
மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




